» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
விரால் மீன்கள் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு
வியாழன் 1, டிசம்பர் 2022 5:48:06 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் "விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி 08.12.2022 அன்று வழங்க பட உள்ளது

இப்பயிற்சியில் விரால் மீனின் உயிரியல், சினைமீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், இனப்பெருக்கம், குஞ்சு சேகரித்தல், குஞ்சுகளை வளர்க்கும் தொழில்நுட்பம், உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள் நேரடியாகவோ அல்லது கல்லூரி வங்கி கணக்கு வாயிலாகவோ பணத்தை செலுத்தலாம்.
பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 07.12.2022 மாலை 5.00 மணிக்குள் அலைபேசி மூலமாக அல்லது கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
உதவி பேராசிரியர், மீன் வளர்ப்பு துறை,
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தூத்துக்குடி -628 008
அலை பேசி எண் (8072208079, 9600205124)
மின் அஞ்சல்: ([email protected], [email protected])
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் சமுதாய கல்லூரியில் பரிசளிப்பு விழா!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:32:41 PM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:27:49 PM (IST)

போலி விளம்பரங்கள் குறித்த விழிப்புணர்வு: மரியன்னை கல்லூரியில் கருத்தரங்கம்!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 10:20:14 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் சமூக மேம்பாட்டுத் திட்டப் பணிகள்!
சனி 23, செப்டம்பர் 2023 3:18:49 PM (IST)

செம்பூர் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கல்
சனி 23, செப்டம்பர் 2023 9:44:12 AM (IST)

ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூாியில் பண்ணாட்டு கருத்தரங்கம்
வெள்ளி 22, செப்டம்பர் 2023 8:24:45 PM (IST)
