» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு கே.டி.கோசல்ராம் பள்ளி மாணவர்கள் தேர்வு

சனி 19, நவம்பர் 2022 4:35:58 PM (IST)மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு தூத்துக்குடி முத்தையாபுரம் கே.டி. கோசல்ராம் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

தூத்துக்குடி வருவாய் வட்ட அளவில் நடைபெற்ற 14 வயதிற்குட்பட்ட கபடிப் போட்டி மற்றும் 14 வயதிற்குட்பட்ட ஒற்றையர், இரட்டையர் வளையப்பந்து போட்டிகளில் முத்தையாபுரம் கே.டி. கோசல்ராம் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்,  முதலிடம் பெற்று பள்ளிக் கல்வித் துறை நடத்தும் மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிக்கல்விக்குழு தலைவர் செல்ல ராஜா, செயலர் கனகமணி, தலைமை ஆசிரியர் பெரியசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் சத்திய சங்கர், அருள்முருகன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் வெகுவாகப் பாராட்டியதோடு மாநிலப் போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory