» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் தேசிய புற்று நோய் விழிப்புணர்வு முகாம்!

புதன் 9, நவம்பர் 2022 8:18:23 AM (IST)நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட குழு மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய புற்று நோய் விழிப்புணர்வு முகாம் நாசரேத் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

முகாமிற்கு பொறியியல் கல்லூரி முதல்வர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புனித லூக்கா மருத்துவமனை மருத்துவர், மிஷ்டினா மனோ கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு புற்றுநோய் பாதுகாத்தல் குறித்து சிறப்புரையாற்றினார். நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி ஆங்கிலதுறை பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலகருமான அ.ஷெர்லின்ராஜா சிறப்புரையாற்றினார். 

இந்த முகாமில் இருகல்லூரிகளைச் சார்ந்த 120 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முகாமை மர்காஷிஸ் கல் லூரி தாளாளர் பிரேம்குமா ர் இராஜசிங், பொறியியல் கல்லூரி தாளாளர் ஜெ. ஜெயக்குமார் ரூபன் மற்றும் முதல்வர்கள் ஜெ. குளோரியம் அருள்ராஜ், ஜெயக்குமார் ஆகியோர் ஆலோசனைப்படி இரு கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கோ.சாமு வேல் தங்கராஜ் கோரேஸ், அ.ஷெர்லின் ராஜா, எஸ். ஞானசெல்வன், ஏ. ஜெனிபர் கிரேனா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory