» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காசிஸ் பள்ளியில் உலக ஓசோன் தினம்

ஞாயிறு 18, செப்டம்பர் 2022 12:36:13 PM (IST)நாசரேத் மர்காசிஸ் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்பட்டது. 

இதை முன்னிட்டு மாணவர்களிடையே கவிதை மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. பள்ளியின் பசுமை படை சார்பில் வளாகத்தில் மரம் நடுவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபகரன் பிரேம்குமார் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியை சாரா ஞானபாய் முன்னிலை வகித்தார். 

மரம் வளர்ப்பதினால் ஓசோ ன் படலத்தை பாதுகாக்க  மு டியும் என்ற விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி மாணவர்கள் பேரணி நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய பசுமை படை பொறுப்பாளர் அம்பு ரோஸ்சுகிர்தராஜ் தலைமை யில் வேளாண் ஆசிரியர் ஜெய்சன் பாபு, உடற்கல்வி ஆசிரியர் சுஜித், தொழிற் கல்வி ஆசிரியர் ஜெயசிங் ஜெயக்குமார், ஓவிய ஆசிரி யர் அலெக்ஸன் ஆகியோர்  செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் சமுதாய கல்லூரியில் பரிசளிப்பு விழா!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:32:41 PM (IST)


Sponsored Ads

Thoothukudi Business Directory