» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 94.04 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி!
திங்கள் 27, ஜூன் 2022 11:20:11 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாவட்டத்தில் 94.04 சதவிகித மாணவ, மாணவிகள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் 9201 மாணவர்கள், 10,739 மாணவிகள் என மொத்தம் 19,940 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதில், 8,247 மாணவர்கள், 10,504 மாணவிகள் என மொத்தம் 18,751 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.04 சதவிகித தேர்ச்சி ஆகும்.
மாணவர்கள் 89.63 சதவிகிதமும், மாணவிகள் 97.81 சதவிகிதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 11ம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், அவர்கள் 12ஆம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவர்கள் 11ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை சிறப்புத் தேர்வில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பண்டாரம்பட்டி பள்ளியில் சுதந்திர தின விழா
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 3:03:25 PM (IST)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதி மொழி!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 5:04:11 PM (IST)

ஏபிசி மகாலட்சுமி கல்லூரி சார்பில் வீடுதோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி
புதன் 10, ஆகஸ்ட் 2022 8:18:06 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி மகளிர் விடுதியில் ஜெனரேட்டர் திறப்பு விழா!
வியாழன் 4, ஆகஸ்ட் 2022 4:36:06 PM (IST)

சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்
வெள்ளி 22, ஜூலை 2022 12:23:10 PM (IST)

பாரதியார் வித்யாலயாவில் இலவச சீருடை வழங்கும் விழா
திங்கள் 18, ஜூலை 2022 8:43:50 PM (IST)
