» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி

திங்கள் 27, ஜூன் 2022 10:25:25 AM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வில் பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வியில் மொத்தம் 216 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இதில் தேர்வு எழுதிய 216 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். 

மாணவி பவித்ரா 600க்கு 585 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவி ஐஸ்வர்யா பானு 583 2ம் இடத்தையும், மாணவர் உதய சந்தோஷ் 577 மதிப்பெண்  பெற்று 3ம் இடத்தையும் பிடித்தனர். உயிரியியல் பாடத்தில் 2 பேரும், வேதியியல் பாடத்தில் ஒருவரும், கணினி பாடத்தில் 5 பேரும், வணிகவியலில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனைப்படைத்துள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் வழிக்கல்வியில் 98 சதவீத தேர்ச்சியும், ஆங்கில வழிக்கல்வியில் 100 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. மாணவி பிரீத்தி 500க்கு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், மாணவி பாலகார்த்திகா 483 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், மாணவி கோபிஷா 481 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி செயலாளர் செல்வம், தலைவர் பிரபாகரன், பொருளாளர் விஜயசேகர், நிர்வாக அலுவலர் சுரேஷ் காமராஜ், தலைமையாசிரியர் வித்யாதரன் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory