» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மர்காஷிஸ் கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு

வெள்ளி 8, ஏப்ரல் 2022 5:03:23 PM (IST)நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்முகத் தேர்வில் 132 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 
               
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மற்றும் சென்னை புளூ ஓசோன் பர்சனல் அலைடு சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கான வளாக நேர்முகத்தேர்வு நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் டாக்டர் அருள்ராஜ் பொன்னுதுரை துவக்கி வைத்து தலைமை உரை ஆற்றினார். 

முகாமில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி, சாயர்புரம் கல்லூரி மற்றும் காயல்பட்டணம் வாவு வஷிகா கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மாணவிகள் 85 பேர் உட்பட மொத்தம் 132 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. 

முகாமில் கல்லூரி துணை முதல்வர் ஜெயராஜ் பெரியநாயகம் ஜெயராஜ் அன்னபாக்கியம் தேசிய பொறியியல் கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி செயலாளர் எஸ்டிகே ராஜன் மற்றும் முதல்வர் அருள்ராஜ் பொன்னுத்துரை தலைமையில் வாழ்க்கை வழிகாட்டுதல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாய் ஷோபினி, ஆரோக்கிய அமுதன், ஞானசுமதி மற்றும் கல்லூரி அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory