» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம்
புதன் 23, மார்ச் 2022 3:53:47 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.
தண்ணீரின் விலை மதிப்பற்ற தன்மையை நம் சமூகத்திற்கு உணர்த்தவும், நீர்வளங்களை பாதுகாக்கவும், விழிப்புணர்வை மக்களிடையே எடுத்துரைக்கவும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சீசைடு சார்பில் உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொ) இரா.சாந்தகுமார் தலைமை வகித்தார். பேராசிரியை பத்மாவதி வரவேற்பு பேசினார். விழாவில் ரோட்டரி கிளப் ஆப் சீசைடின் தலைவர் சரவணக்குமார், முன்னாள் உதவி கவர்னர் ஆர்.எம்.பாலமுருகன் ஆகியோர் நீர் ஆதாரங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தனர். செயலாளர் ஆஸ்கர் பெர்னான்டோ, முன்னாள் உதவி கவர்னர் ஆல்ட்ரின் மிரம்டா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பி.எப்.எஸ்.சி. முதலாம் ஆண்டு மாணவி சிவரஞ்சனி "நிலத்தடி நீரின் மதிப்பீடு” பற்றி தெளிவாக பேசினார். விழாவில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் இளநிலை மாணாக்கர்களுக்கிடையே நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறையின் உதவிப் பேராசிரியர்கள் மணிமேகலை, மாணிக்கவாசகம் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி மாணவர்கள் சாதனை
வெள்ளி 1, ஜூலை 2022 3:48:42 PM (IST)

வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கவிதை நூல் வெளியீடு
வியாழன் 30, ஜூன் 2022 10:09:17 AM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயாவில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திங்கள் 27, ஜூன் 2022 4:40:07 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 94.04 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி!
திங்கள் 27, ஜூன் 2022 11:20:11 AM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி
திங்கள் 27, ஜூன் 2022 10:25:25 AM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பி.எம்.சி மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை: ஆட்சியர், எஸ்பி பாராட்டு
புதன் 22, ஜூன் 2022 10:13:54 AM (IST)
