» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மீன் வகை பாட்டியலாளர்களின் ஊக்குவிப்பு தினம்
செவ்வாய் 22, மார்ச் 2022 10:35:59 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத் துறை சார்பில் மீன்வகை பாட்டியலாளர்களின் ஊக்குவிப்பு தினம் நடைபெற்றது.
மீன் இனங்களைப் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், அவற்றை காத்திட நாம் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டிய வழிமுறைகள், மீன் வகைபாட்டியல் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன்வகை பாட்டியலாளர்களின் ஊக்குவிப்பு தினம் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர்(பொ) இரா.சாந்தகுமார், தலைமையுரை வழங்கி சிறப்பித்தார். மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத் துறைத் தலைவர் உதவிப் பேராசிரியர்(பொ) ரா.துரைராஜா வரவேற்புரை வழங்கினார்.
விழாவில் மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், முதுநிலை விஞ்ஞாணி இரா.சரவணன், கடல்வாழ் உயிரினங்களில் புறக்கணிக்கப்பட்ட நீர்வாழ் உயிரினங்களின் வகைப்பாட்டியலின் முக்கியத்துவம், தான் மேற்கொண்ட பல்வேறு நீர்வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகளை மற்றும் முடிவுகள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நிறைவாக உதவிபேராசிரியர் சுதன நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானிகள், துறைத் தலைவர்கள, கல்லூரி ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி மாணவர்கள் சாதனை
வெள்ளி 1, ஜூலை 2022 3:48:42 PM (IST)

வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கவிதை நூல் வெளியீடு
வியாழன் 30, ஜூன் 2022 10:09:17 AM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயாவில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திங்கள் 27, ஜூன் 2022 4:40:07 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 94.04 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி!
திங்கள் 27, ஜூன் 2022 11:20:11 AM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி
திங்கள் 27, ஜூன் 2022 10:25:25 AM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பி.எம்.சி மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை: ஆட்சியர், எஸ்பி பாராட்டு
புதன் 22, ஜூன் 2022 10:13:54 AM (IST)
