» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல் பயிற்சி

செவ்வாய் 21, டிசம்பர் 2021 5:41:36 PM (IST)தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல்” குறித்த ஓரு நாள் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று "கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல்” என்ற ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சியானது நாகர்கோவிலில் உள்ள செயின்ட் சேவியர் கத்தோலிக் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 44 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. செயின்ட் சேவியர் கத்தோலிக் பொறியியல் கல்லூரி உதவி பேராசியர்கள் ஜேர்லின் ராஜன், ஜாஸ்மின் சுகுனா ஆகியோர் பங்கேற்றனர். 

இப்பயிற்சியானது சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தின் நிதி உதவியுடன் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இயங்கிகொண்டிருக்கும் கடல்சார் உணவுப்பொருள் வணிக மையத்தின் வாயிலாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மீன்பதனதொழில் நுட்பத்துறை, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் கணேசன், துவக்கி வைத்து தொழில் முனைவதற்கு வாய்ப்பான கடல் உணவுப்பொருட்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் பயிற்சியாளர்கள் மீன்பதனதொழில் நுட்பத்துறையில் உள்ள கடல்சார் உணவுப்பொருள் வணிக மையத்தின் வசதிகளைப் பற்றி அறிந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை துறைத் தலைவர், பேராசிரியர் இரா. சாந்தகுமார், மீன்வள தொழில் முனைவோரின் பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வேளாண் வணிக மேலாண்மை மற்றும் சந்தைப் படுத்துதல் தொடர்பான கருத்துக்களை ருத்ரா, தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் (பொ), சுஜாத்குமார் தலைமை தாங்கி பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பயனாளிகள் பயிற்சி பற்றிய தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory