» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பண்டாரம்பட்டி பள்ளியில் வாய்பாடு ஒப்புவித்தல் போட்டி

செவ்வாய் 21, டிசம்பர் 2021 3:06:56 PM (IST)தூத்துக்குடி, பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. தொடக்கப் பள்ளியில் வாய்பாடு ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். வாகைக்குளம் சாமுவேல் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மோசஸ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி ஊரக வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் ஜெயா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருவைகுண்டம் ஒன்றியம் கொத்தலரிவிளை தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் ஞானதுரை கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் வாய்பாடு ஒப்புவிக்கும் போட்டி ஆரம்பமானது. 2 ஆவது வாய்பாடு முதல் 16 ஆம் வாய்பாடு வரை மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் 1 முதல் 16 வரை அதிவிரைவில் கூறவேண்டும். மிகக் குறைந்த நிமிடத்தில் ஒப்புவிக்கும் முதல் 3 மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி ஐந்தாவது வகுப்பு படிக்கும் மாணவி ஹர்ஷினி 6 நிமிடங்கள் 33 நொடிகளில் ஒப்புவித்து முதல் பரிசும், நான்காவது வகுப்பு படிக்கும் மாணவன் யூதா கேபா 7 நிமிடங்கள் 20 நொடிகளில் ஒப்புவித்து இரண்டாம் பரிசும், 7 நிமிடங்கள் 42 நொடிகளில் ஐந்தாவது வகுப்பு படிக்கும் மாணவி சந்தனமாரியும், மூன்றாவது வகுப்பு மாணவி சஞ்சனா தேவியும் ஒப்புவித்து மூன்றாவது பரிசை வென்றனர். போட்டி முடிந்தவுடன் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் நால்வருக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்பு வாரியாக முதல் இரண்டு மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் அணைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பெற்றோர்களும், ஊர் மக்களும் கலந்துகொண்டு மாணவர்களைப் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory