» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் உலக கை கழுவும் தின விழா

வெள்ளி 15, அக்டோபர் 2021 7:45:55 PM (IST)கோவில்பட்டியில்  உலக கை கழுவும் தின விழாவை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பாரதியார் நினைவு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் உலக கைகழுவும் தினவிழா கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு அங்கன்வாடி மையத்தில் வைத்து நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவும் பழக்கத்தை மேற்கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் சோப்பு போட்டு கை கழுவும் முறை குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் சோப்பும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் முத்துச்செல்வம் தலைமை வகித்தார்.குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா,நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அங்கன்வாடி அமைப்பாளர் ராதா அனைவரையும் வரவேற்றார். சுகாதார பயிற்றுநர் முத்து முருகன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சோப்பு போட்டு கை கழுவும் முறை குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.குழந்தைகள் அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்,சோப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் அங்கன்வாடி பணியாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory