» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பாரதியார் வித்யாலயத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஞாயிறு 26, செப்டம்பர் 2021 9:27:06 PM (IST)தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ஏபிசிவீ. கணபதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் ஹெச்.பிலிப், டாக்டர் வேல் ராமலிங்கம், டாக்டர் பத்மநாபன், தொழில் அதிபர் ராஜா குமார் ஆசிர்வாதம், ஆவுடையப்பன், மான் ராஜா, மணிராஜ் ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் தலைமை ஆசிரியர்களின் புகைப்படங்களை திறந்து வைத்து பேசினார்கள். 

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்கம் ஒன்று அமைப்பது என்றும் அதன் மூலம் பள்ளியின் ஆய்வகங்களை நவீனப்படுத்துவது, விளையாட்டு மைதானத்தை சீரமைப்பது, சுற்றுச்சுவரை வலுப்படுத்தி நுழைவு வாயில் அழகுப்படுத்துவது, மாணவர் சேர்க்கைக்கு உதவுவது போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. 

நிகழ்ச்சியில் பல்துறையைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் அழகுவேல், குமாரவேல், வாசு ராஜன், சிவகாமி நாதன், குபேந்திரராஜா, கந்தசாமி, சத்திய வேந்தன், பன்னீர் செல்வம்,துரைக்கனி, அண்ணாமலை, ஆறுமுகசாமி, சதீஸ்குமார், அர்ஜீனன், பாலசுப்ரமணியன், சந்தானம், வீரபத்ரன், ஜஹாங்கீர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.பாலசுந்தர கணபதி நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory