» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

முத்துநகர் கடற்கரையில் மீன்வளக் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணி

ஞாயிறு 26, செப்டம்பர் 2021 8:51:56 AM (IST)தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை மீன்வளக் கல்லூரி மாணவ-மாணவிகள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கடலில் ஏற்படும் மாசுகள் 80 சதவீதம் நிலத்தில் வாழும் மக்களால் ஏற்படுகின்றன. ஒரு ஆண்டில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் வந்து சேர்வதால் மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஆண்டுக்கு ஒரு மில்லியன் கடற்பறவைகள் மற்றும் ஒரு லட்சம் கடல் வாழ் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கடல் பகுதியில் தேவையற்ற குப்பைகளை கொட்ட கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கடந்த ஒரு வார காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சர்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் கீழ் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மீன்வளக் கல்லூரி மாணவ- மாணவிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் சாந்தகுமார் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன் தொடங்கி வைத்தார். பின்னர் கடலோரப் பகுதி தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சென்றவர்களிடம் மாணவ-மாணவிகள் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory