» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
ஜனாதிபதியிடம் விருது பெற்ற காமராஜ் கல்லூரி பேராசிரியருக்கு வரவேற்பு
சனி 25, செப்டம்பர் 2021 3:59:21 PM (IST)

குடியரசு தலைவரிடம் விருது பெற்ற காமராஜ் கல்லூரி பேராசிரியர் மற்றும் கல்லூரி முதல்வருக்கு தூத்துக்குடியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறந்த நாட்டு நல பணித்திட்டக்காக குடியரசு தலைவரிடம் விருது பெற்ற காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் மற்றும் நாட்டு நல பணித்திட்ட அதிகாரி தேவராஜ், கல்லூரி முதல்வர் நாகராஜ் ஆகியோருக்கு தூத்துக்குடியில் கல்லூரி சார்பில் வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய கல்லூரி முதல்வர், குடியரசு தலைவரின் விருது அனைவரின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். பேராசிரியர் தேவராஜ் பேசுகையில் "விருதினை பெறுவதற்கு முழுக்காரணமான நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள், நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊடகத்துறை நண்பர்கள் இன்னும் பலரது முயற்சியால் கிடைக்கப்பெற்றது" என்றார்.
விழாவில் காமராஜ் கல்லூரியின் செயலாளர் சோமு சோமசுந்தரம், துணைத் தலைவர் நடராஜன், கல்லூரியின் பொருளாளர் ரா.முத்துச்செல்வம், காரப்பேட்டை நாடார் மகமை செயலாளர் பா.விநாயகமூர்த்தி, பாரத ரத்னா காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் க.ஆனந்தராஜ், காமராஜ் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் கோ.நாராயணசாமி, காமராஜ் கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், காமராஜ் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலர்கள், காமராஜ் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பாரத ரத்னா காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் மே தினவிழா : முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
செவ்வாய் 3, மே 2022 3:10:18 PM (IST)

சாத்தான்குளம் பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்
திங்கள் 25, ஏப்ரல் 2022 12:06:50 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு
வெள்ளி 8, ஏப்ரல் 2022 5:03:23 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்!
வெள்ளி 8, ஏப்ரல் 2022 3:55:44 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம்
புதன் 23, மார்ச் 2022 3:53:47 PM (IST)

தூத்துக்குடியில் மாநில செஸ் போட்டி: ஏப். 2ல் துவக்கம்
புதன் 23, மார்ச் 2022 8:29:59 AM (IST)

K.ganeshanSep 25, 2021 - 08:46:16 PM | Posted IP 173.2*****