» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூரில் புதிய பள்ளிக் கட்டிடம் திறப்பு விழா

வெள்ளி 17, செப்டம்பர் 2021 11:40:03 AM (IST)செய்துங்கநல்லூர் குழந்தை ஏசு மழலையர் பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் புனித அடைக்கல அன்னை கன்னியர்கள் சபை சார்பில் குழந்தை ஏசு மழலையர் பள்ளி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிநடந்து , அதற்கான திறப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்குப் பள்ளி தாளாளர் அருட்சகோதரி ரமணி பாய் தலைமை வகித்தார். 

தலைமை ஆசிரியை நம்பிக்கை மேரி வரவேற்றார். கட்டிடத்தினை புனித அடைக்கல அன்னையின் சபை தலைமை அன்னை சகோதரி மரிய பிலேமீனாள் திறந்து வைத்தார். செய்துங்கநல்லூர் ஆர்.சி. பங்கு தந்தை ஜாக்சன் அருள் சிறப்பு ஜெபம் செய்து கட்டிடத்தினை அர்ச்சித்தார். திண்டுக்கல் தலைமை சகோதரி லீமா வாழ்த்துரை கூறினார். முன்னாள் தலைமை ஆசிரியை ஜெயதீபா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory