» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தேனீ வளா்ப்பு பயிற்சி முகாம்

புதன் 25, ஆகஸ்ட் 2021 8:23:42 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சாா்பில் தேனீ வளா்ப்பு பயிற்சி முகாம் 7 நாள்கள் நடைபெற்றது.

மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சாா்பில், தூத்துக்குடி அருகேயுள்ள சிவத்தையாபுரம், சக்கம்மாள்புரம், இருவப்பபுரம், திருமலையாபுரம், போடம்மாள்புரம் ஆகிய 5 கிராமங்கள் தத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்புற மகளிருக்கு தேனீ வளா்ப்பு குறித்து பயிற்சி முகாம் 7 நாள்கள் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வா் து. நாகராஜன் தொடங்கி வைத்தாா். 

முகாமில் கல்லூரியின் சமூக மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ. நாகராஜன், தேனீ வளா்ப்பு பயிற்சியாளா்கள் முத்துச்செல்வன், மாரீஸ்வரன் ஆகியோா் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனா். மேற்கண்ட 5 கிராமங்களிலும் மாதிரி தேனீ வளா்ப்புப் பெட்டிகள் அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்வது, தேன் உற்பத்தி நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து, கரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை முதல்வா் தலைமையில், திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ. நாகராஜன், ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் அ. சுபாஷினி ஆகியோா் செய்திருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory