» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூய மரியன்னை கல்லூரி சார்பில் மகளிருக்கு பயிற்சி!

வியாழன் 19, ஆகஸ்ட் 2021 11:12:39 AM (IST)தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பில் மகளிருக்கான சுயதொழில் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) தூத்துக்குடி , உன்னத் பாரத் அபியான் மற்றும் சமுதாய  வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப்புற மகளிர் பொருளாதார சுதந்திரம் அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் பழையகாயல் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு சுயதொழில் மேம்பாட்டிற்காக தையல்  கலை பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை ராஜாத்தி, ஒருங்கிணைத்து ஏப்ரல் மாதம் 12 தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 தேதி வரை பயிற்சி அளித்தார். 

இப்பயிற்சியின் நிறைவு விழாவில் பயிற்சிபெற்ற 40பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  பழையகாயல் தூய பரிபூரண அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை அமலன் அவர்கள் முன்னிலையில்   E-Kids International  உரிமையாளர் ஃபிரடி பெர்னான்டோ  தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி குழந்தை தெரெஸ் வாழ்த்துரை வழங்கினார். தூய மரியன்னை கல்லூரி வணிகவியல் துறை இணை பேராசிரியை டெய்ஸிபாய் மற்றும் துணை பேராசிரியை சோனி ஆகியோர் இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

[email protected]Aug 19, 2021 - 09:27:51 PM | Posted IP 173.2*****

To make an empowered women is the motto of our college. They proved it each and every second. Congratulations to all my dear Sisters and Staffs. May the Almighty BLESS each and every one of you Sisters. My hearty 💖💓💖 wishes to you Sisters. I am really proud to say that I am also a part of Marian garden

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory