» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயா பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வியாழன் 19, ஆகஸ்ட் 2021 10:38:03 AM (IST)தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநரும் (எக்ஸ்டென்சன்) தற்போதைய திருவனந்தபுரம் ஐசிஏஆர்யின் ஆராய்ச்சி ஆலோசனைக்குழு உறுப்பினருமான ஹெச். பிலிப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொழில் அதிபர்கள் ராஜகுமார் ஆசிர்வாதம், செந்தில் வீரபாகு, வேல்முருகன், வழக்கறிஞர் அழகுவேல், பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் சேகர், வசுராஜன், பன்னீர்செல்வம், கண்ணப்பன், ஆறுமுகசாமி, சந்திரசேகர், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் மாரியப்பன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை கூறினார்கள். பின்னர் தாங்கள் பயின்ற வகுப்பறைகள், ஆய்வகம், நூலகம், மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்பில் தயார் ஆகிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்டனர். நிறைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory