» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

விரால் மீன் வளர்ப்பு குறித்து இணையவழியில் பயிற்சி

செவ்வாய் 17, ஆகஸ்ட் 2021 4:18:21 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "விரால் மீன் வளர்ப்பு" குறித்த ஒரு  நாள் இணைய தள வழியிலான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது தொடர்பக கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் வளர்ப்பு துறை சார்பில் "விரால் மீன் வளர்ப்பு" பற்றிய ஒரு நாள் இணையதள வழியிலான பயிற்சி 25.08.2021 (காலை 10.00 மணி முதல் பிறபகல் 12.00 மணி வரை) அன்று வழங்க பட உள்ளது.

இப்பயிற்சியில் விரால் மீன் வளர்ப்பின் முக்கியவத்துவம், இந்தியாவில் விரால் மீன் வளர்ப்பின் தற்போதைய நிலை, இடத்தேர்வு, விரால் மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு முன் செய்ய வேண்டிய மேலாண்மை முறைகள், தீவனம் அளித்தல், அறுவடை செய்த மீன்களை சந்தைப்படுத்துதல், உற்பத்தி செலவின கணக்கீடு ஆகிய தலைப்புகளில் இணைய தள வழியிலான தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்படும். மேலும், விரால் மீன் வளர்ப்பு குறித்த காணொலி காட்சித் தொகுப்பும் காண்பிக்கப்படும்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். இக்கல்லூரியின் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தலாம். பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு மின் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 24.08.2021 மாலை 5.00 மணிக்குள் அலை பேசி மூலமாக அல்லது கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும். 

பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: பேராசிரியர் மற்றும் தலைவர், மீன் வளர்ப்பு துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி - 628 008 அலை பேசி எண் (09442288850) மின் அஞ்சல்: [email protected]


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory