» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ஸ்பிக் நகர் பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா

திங்கள் 16, ஆகஸ்ட் 2021 3:18:00 PM (IST)தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 

தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளியில் 75வது ஆண்டு சுதந்திரதின விழா பள்ளி மைதானத்தில் நேற்று கொண்டப்பட்டது. விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும், ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளித் தலைவருமான எஸ்.ஆர்.இராமகிருஷ்ணன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து சிறப்புரை ஆற்றினார். 

ஸ்பிக் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பாலு, பள்ளிச்செயலர் டி.எஸ்.பிரேம் சுந்தர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் "கோவிட் 19” தொற்று தடுப்புப்பணியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை ஊக்குவித்து, அவர்களைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு நற்சான்றிதழ்களும், நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். நிறைவாக நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே முடிவடைந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory