» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி கிரஸண்ட் பள்ளியில் 75வது சுதந்திர தின விழா

திங்கள் 16, ஆகஸ்ட் 2021 11:07:38 AM (IST)தூத்துக்குடி கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 75வது சுதந்திர தின விழா நடைபெற்றது. 

விழாவிற்கு பள்ளியின் தாளாளர் காதர் ஷரீப் தலைமை வகித்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜேம்ஸ் சுந்தர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து தற்போதைய சூழலை வெல்லும் வழிவகை குறித்து பேசினார். ஆன்லைன் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர் முன்னாள் இராணுவ அதிகாரி செல்லத்துரை பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

விழாவில், முதலமைச்சரின் கோவிட் நிவாரண நிதிக்கு தன்னுடைய சேமிப்பிலிருந்து ரூ.1456/- வழங்கிய நான்காம் வகுப்பு மாணவி யாழினி ஸ்ரீகுமாரியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 75 மரக் கன்றுகள் நடும் திட்டம் தூத்துக்குடி மாவட்ட ஜவான்கள் நலச் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. முதல் மரக்கன்றை டாக்டர் ஜேம்ஸ் சுந்தர் சிங் நட்டு மரம் நடு விழாவை தொடங்கி வைத்தார். 

தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளின் படி நடைபெற்ற இவ்விழாவில் முதல்வர் செய்யது அலி, துணை முதல்வர் இம்ரான் கான் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியை வள்ளிநாயகி தொகுத்து வழங்கினார். முன்னதாக ஆசிரியர் பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக ஆசிரியை பெரிய நாயகி நன்றியுரையாற்றினார்.


மக்கள் கருத்து

HABIBUR RAHMAN.I ( Alumni of crescent)Aug 16, 2021 - 01:38:44 PM | Posted IP 162.1*****

Iam very proud of my school.My school is best for always motivating the students in their best.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory