» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் வகுப்பறை கட்டிடம் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்!

வெள்ளி 23, ஜூலை 2021 12:09:10 PM (IST)நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இன்டர்லாக் சாலை மற்றும் வகுப்பறை கட்டிட கான்கிரீட் மேற்கூரை ஆகியவற்றை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் லட்சம் மதிப்பில் இன்டர்லாக் சாலை மற்றும் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் வகுப்பறைகட்டிடத்தின் மேற்கூரை ஓடுக ளினால் ஆனவற்றை அகற்றிவிட்டு கான்கிரீட் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதின் திறப்பு விழா நடைபெற்றது.நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைப்பாதிரியார் அண்ட்ரூ விக்டர் ஞான ஒளி ஆரம்ப ஜெபம் செய்தார். சென்னை கிரேஸ் சூப்பர் மார்க்கெட் அதிபர் எஸ்.சுதாகர், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் எஸ்.டி.கே.ராஜன், திருமண்டல கல்வி நிலவரக்குழு செயலாளர் ஆடிட்டர் ஜெபச்சந் திரன் ஆகியோர் முன்னிலையில் தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் ரிபன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நாசரேத் தூயயோவான் பேராலய உதவிக் குருவானவர்கள் ஜாண்சன், ஜெபஸ்டின் தங்கபாண்டி, டாக்டர் கமலி ஜெயசீலன், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஜெ.ஜெகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராமஜெ யம், ஒன்றிய செயலாளர்கள் பார்த்தீபன், நவீன்குமார், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஜனகர், நாசரேத் நகர செயலாளர் ரவி செல்வக்குமார், அருணாச்சலம், பார்த்தீபன், தம்பு என்ற அருண் சாமுவேல், பேரின்பராஜ், ஜமீன் சாலமோன், ஜோதி டேவிட், அலெக்ஸ் புரூட்டோ, அன்பு தங்க பாண்டியன், சாமுவேல், அதிசயமணி, செயசிங்,ஒன்றிய திமுக அவைத்தலைவர் சௌந்தர், சிலாக்கியமணி, கஸ்தூரி, பாலச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசீலன்  உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தாளாளர் ஏ.டி.ஹெச். சந்திரன் வரவேற்றார். முடிவில் தலைமையாசிரியர் ஆர்.அல்பர்ட் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory