» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பருவத் தோ்வு 28-ம் தேதி தொடக்கம்

திங்கள் 21, ஜூன் 2021 10:45:31 AM (IST)

பிஎட், எம்எட் படிப்புகளுக்கான பருவத் தோ்வு வரும் 28-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கும், முதலாமாண்டில் அரியா் வைத்திருக்கும் மாணவா்களுக்கும் தோ்வு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தோ்வு கட்டணத்தைச் செலுத்துவதற்கான அவகாசம் நாளை திங்கள்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது.

இந்தநிலையில், தோ்வுக்கான அட்டவணையை ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிஎட், எம்.எட் 2-ஆம் ஆண்டுக்கான தோ்வு மற்றும் அரியா் பாடங்களுக்கான தோ்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கி ஜூலை 5-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது. மாணவா்கள் தோ்வுக்கான அட்டவணையை www.tnteu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory