» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தேசிய திறனாய்வுத் தேர்வு: சவேரியார்புரம் பள்ளி மாணவர்கள் 5பேர் வெற்றி

ஞாயிறு 20, ஜூன் 2021 9:17:19 PM (IST)

தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வில் சவேரியார்புரம் ஆர்.சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 5பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

2020-2021ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் சாத்தான்குளம்  அருகேயுள்ள சவேரியார்புரம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி மாணவர்கள், ஆட்லின்ஜெரின், அருண்சேவியர், கெவின், ஐஸ்வர்யா, எப்சிபா ஆகிய ஐந்து மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி ஆட்லின் ஜெரின் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். இந்த மாணவர்களுக்கு 9வகும்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ரூ1000 ஆயிரம் வீதம் 4ஆண்டுகளுக்கு ரூ48ஆயிரம் அரசு சார்பில் வழங்கபட உள்ளது. . 

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ரெமிஜியுஸ் லியோன், தூத்துக்குடி மறைமாவட்ட தென்மண்டல கல்விச்செயலர் அருட்தந்தை ஜோசப் ஸ்டாலின், ஆழ்வார்திருநகரி வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயபாலன் தேவ ஆசீர், ரோஸ்லின் ராஜம்மாள்,மீனாட்சி, தலைமை ஆசிரியை ஜெஸ்மின் விண்ணரசி, மற்றும் ஆசிரியர்கள்  ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

உசரத்துக்குடியிருப்பு மாணவன் 

தேசிய திறனாய்வு தேர்வில் உசரத்துக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வசந்த் வெற்றி பெற்றுள்ளான். 

கடந்த கல்வி ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் சாத்தான்குளம் ஒன்றியம்  உசரத்துக்குடியிருப்பு   ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வசந்த் தேசிய திறனாய்வுத்தேர்வில்  வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளான். வெற்றி பெற்ற இம்மாணவனுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை மாதம் ரூ1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ48000 அரசு சார்பில் வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவனை வட்டாரக்கல்வி அலுவலர் ஜெயவதி ரெத்னாவதி,தலைமையாசிரியர் இம்மாணுவேல் ஜோசப், உள்ளிட்ட ஆசிரியர்கள்  மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory