» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாநில ஓவிய போட்டி: தூத்துக்குடி மாணவி முதலிடம்

சனி 19, ஜூன் 2021 4:51:16 PM (IST)மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளா்‘ விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் தூத்துக்குடி மாணவி சிருஷ்டிகா கென்னடி முதல் பரிசை பெற்றாா்.

திருப்பூா் மாவட்டம், அவினாசியைச் சோ்ந்த சோசியல் இக்குவாலிட்டி மற்றும் டெவலப்மென்ட் நிறுவனம் சாா்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவில் ‘குழந்தைத் தொழிலாளா்‘ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி ஆன்லைன் மூலம் அண்மையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் தூத்துக்குடி மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் எஸ் ஜே கென்னடி-தீபா தம்பதியின் மகளான சிருஷ்டிகா கென்னடி முதல் பரிசை பெற்றாா். தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இவருக்கு, சான்றிதழ் ஆன்லைன் மூலமாகவும் பரிசுத்தொகையை வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory