» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

வாட்ஸ்ஆப் மூலம் 12-ம் வகுப்பு அலகுத் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியீடு

புதன் 19, மே 2021 4:41:00 PM (IST)

பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் மூலம் குழுக்கள் அமைத்து மாணவர்களுக்கு வினாத் தாள்களை அனுப்பி விடைகளைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளது. 

அதில், "வாட்ஸ்ஆப் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே குழுக்களை உருவாக்க வேண்டும். வாட்ஸ்ஆப் குழுவில் வினாத்தாள் அனுப்ப வேண்டும், விடைத்தாளில் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் கட்டாயம் இடம்பெற வேண்டும். வாட்ஸ்ஆப் குழுவின் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், விடியோக்களை பதிவிடக் கூடாது. ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்ஆப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory