» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
வ.உ.சி. கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது!!
செவ்வாய் 16, மார்ச் 2021 3:07:21 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், வ.உ.சி. கல்லூரி நிர்வாகம் மற்றும் மந்திதோப்பு பகுதியில் உள்ள திருநங்கைகள் ஆகியோர் இணைந்து தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ், தலைமையில் இன்று (16.03.2021) நடைபெற்றது. வாக்காளர் கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டார். திருநங்கைகளுக்கு மின்னனு வாக்குபதிவு இயந்திரம், விவிபேட் மூலம் வாக்களிப்பது எப்படி என்று விளக்கினார்.
பின்னர் ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் விழிப்புணர்வு ரங்கோலி, மாற்றுத்திறனாளிகள் பேரணி, பள்ளி மாணவ, மாணவிகளின் மூலம் பெற்றோர்களுக்கு 1 லட்சம் போஸ்ட் கார்டுகள் அனுப்பி வைத்தல் விழிப்புணர்வு பிரசாரம், செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னனு வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம், இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னனு வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் என பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம் தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், வ.உ.சி. கல்லூரி நிர்வாகம் மற்றும் மந்திதோப்பு தொடக்க வேளாண்மை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த திருநங்கைகள் ஆகியோர் இணைந்து தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏப்ரல் 6 சட்டமன்ற தேர்தல் குறித்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும்; விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் விழிப்பணர்வு பெற்று மனசாட்சிப்படி ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருள் வாங்காமல் ஜனநாயக விதிமுறையின்படி வாக்களிக்க வேண்டும்.
இந்தியாவில் திருநங்கைகள் பல்வேறு துறைகளில் முதன்மை பெற்று வருகிறார்கள். நமது தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். முந்தைய மாவட்ட ஆட்சியர் திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டி மந்திதோப்பில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பசுமை வீடு வழங்கியுள்ளார்கள். எனவே அனைத்து பொதுமக்களும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். பணம், பரிசு பொருட்கள் பெறாமல் நமது ஓட்டு நமது உரிமை, உரிமையை யாருக்காவும் விட்டுக்கொடுக்க கூடாது. திருநங்கைகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் நமது மாவட்டத்தில் சிறந்தவொரு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஸ்குமார், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு, வட்டாட்சியர் ஜஸ்டின், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் கல்லூரி மாணவர்கள், மந்திதோப்பு திருநங்கைகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி .
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:04:05 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கு
திங்கள் 29, மார்ச் 2021 5:09:29 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் உலக நுகர்வோர் தினம்
செவ்வாய் 16, மார்ச் 2021 11:41:50 AM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி
புதன் 24, பிப்ரவரி 2021 12:40:21 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு
திங்கள் 15, பிப்ரவரி 2021 11:35:29 AM (IST)

மாவட்ட சிலம்பம் போட்டி : ஸ்ரீகணேசர் பள்ளி சாதனை
வெள்ளி 12, பிப்ரவரி 2021 4:11:15 PM (IST)
