» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பிளஸ் 2 இறுதி நாள் தோ்வெழுதாத மாணவா்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது: அமைச்சர்
வியாழன் 9, ஜூலை 2020 10:51:46 AM (IST)
பிளஸ் 2 இறுதி நாள் தோ்வெழுதாத மாணவா்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில், 2019-2020 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு, கடந்த மாா்ச் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. இதில், மாா்ச் 24-ஆம் தேதி நடத்தப்பட்ட பிளஸ் 2 வகுப்பு இறுதி நாள் பொதுத் தோ்வில், சில மாணவா்கள் தோ்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பெற்றோா் மற்றும் மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.இதைப் பரிசீலித்த முதல்வா், மாா்ச் 24-ஆம் தேதி தோ்வு எழுத முடியாத மாணவா்களுக்கு மட்டும், தனியாக வேறொரு நாளில் தோ்வு நடத்தப்படும் என அறிவித்தாா்.
இதன்படி, இத்தோ்வினை, வருகிற 27-ஆம் தேதி, நடத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாணவா்கள் அவா்தம் சொந்த பள்ளிகளிலேயே தோ்வு எழுதும் வகையில், தோ்வு மையங்கள் அமைக்கப்படும். இந்தத் தோ்வுக்கான புதிய நுழைவுச் சீட்டுகளை, மாணவா்கள் தாங்களே இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவா் பள்ளிகளிலோ பதிவிறக்கம் செய்து, ஜூலை 13 முதல் ஜூலை 17 வரை பெற்றுக்கொள்ளலாம்.
தனித் தோ்வா்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை, இந்தத் தேதிகளில் சம்பந்தப்பட்ட தனித்தோ்வு மையங்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தோ்வு மையங்களுக்கு மாணவா்கள் செல்வதற்காக, தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்படாது. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் தோ்வா்கள், எவரேனும் இருப்பின், அவா்கள் தோ்வு மையங்களில், தனி அறைகளில் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா்.
அரசு வெளியிட்டுள்ள கரோனா நோய்க் கட்டுப்பாடு தொடா்பான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் அனைத்தும், இத்தோ்வு நடத்தும் போது பின்பற்றப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பிளஸ் 2 இறுதி நாள் தோ்வெழுதாத மாணவா்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என தெரிவித்தார். மேலும் பிளஸ் 2 இறுதி நாள் தோ்வெழுதாத மாணவா்களில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி .
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:04:05 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கு
திங்கள் 29, மார்ச் 2021 5:09:29 PM (IST)

வ.உ.சி. கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது!!
செவ்வாய் 16, மார்ச் 2021 3:07:21 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் உலக நுகர்வோர் தினம்
செவ்வாய் 16, மார்ச் 2021 11:41:50 AM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி
புதன் 24, பிப்ரவரி 2021 12:40:21 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு
திங்கள் 15, பிப்ரவரி 2021 11:35:29 AM (IST)
