» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் 30-வது ஆண்டுவிழா நடைபெற்றது.

விழாவிற்கு தூத்துக்குடி ராசி மெடிக்கல்ஸ் மற்றும் ராசி மாம் அன் பேபி தொழிலதிபர் லயன் ஏபி ராஜ் தலைமை தாங்கினார். அவரது துணைவியார் ஜெகதா குத்துவிளக்கேற்றி கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பள்ளியின் முதல்வர் ஜெயாசண்முகம் பொன்னாடை போர்த்தி நினைவுபரிசு வழங்கி கௌரவித்தார். விழா சிறக்கவும், பள்ளியின் முதல்வர் நல்லாசிரியர் விருது பெற்றதை வாழ்த்தியும் முன்னாள் கவுன்சிலர் கோட்டுராஜா, ஏஎம்கே தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ஆனந்தசெல்வி ஆகியோர் பேசினார்கள். 

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் நிறுவனர் சண்முகம் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருடைய பொறுப்புகளைப் பற்றியும், நல்ல எண்ணங்களையும், நற்பண்புகளை மனதில் வளர்ப்பதையும், அதனால் வாழ்வில் வெற்றிப் பெற முடியும் என்பதைக் கூறினார். அதன்பின் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் இரண்டு இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், சேவை செய்வதில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கும், வருகைபுரிவதில் முதலிடம் பிடித்த மாணவி பாரதிக்கும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி மரிய இருதய ஹேபா ஆகியோருக்கும் ராஜ் மற்றும் ஜெகதா இருவரும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

ஆசிரியைகள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கு நினைவுபரிசு வழங்கப்பட்டது. ஜப்பான் பல்கலைக் கழகமும், தமிழ்நாடு தமிழன்னை அறக்கட்டளையும் இணைந்து, சக்தி வித்யாலயா பள்ளியின் வரலாற்று ஆசிரியை உதயம்மாள் என்பவருக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை வழங்கியுள்ளது. அவருக்கு பள்ளியின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. பள்ளியின் ஆண்டறிக்கையை துணைமுதல்வர் ரூபிரத்னபாக்கியம் வாசித்தார். அதன்பின்னர் பரதநாட்டியம், குறு நாடகங்கள், மேலைநாட்டு நடனம், ஒடிஸா நடனம், கிராமிய நடனம், மசாலா நடனம், சிவதாண்டவம் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக ஆசிரியை செல்வமாரி வரவேற்று பேசினார். நிறைவாக ஆசிரியை ராஜாத்தி அனைவருக்கும் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory