» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

விஜயராமபுரம் பள்ளியில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

புதன் 29, ஜனவரி 2020 8:14:35 PM (IST)தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே  விஜயராமபுரம் பள்ளியில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு  விழா பள்ளியில்  நடைபெற்றது. விழாவுக்கு  பள்ளித் தலைவர் வேல்ச்சாமி தலைமை வகித்தார். பள்ளி செயலர்  திருமணி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீசபாண்டி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வட்டார கல்வி அலுவலர் யசோதா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காலணி ஷூ வழங்கப்பட்டது. 

இதில் தச்சமொழி ஊராட்சித் தலைவர் பிரேம்குமார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லிங்கத்துரை,  நிர்வாகக்குழு உறுப்பினர் ஆனந்தராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் சண்முகராஜ் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory