» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பிஎம்சி பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

புதன் 23, அக்டோபர் 2019 3:55:23 PM (IST)



தூத்துக்குடி பிஎம்சி மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இராமநாச்சியார்புரம் கிராமத்தில் நடைபெற்றது. 

விழாவில் மறவன்மடம் சேகரகுருவானவர் அருட் ஜெபஸ் , பிஎம்சி பள்ளிகளின் செயலர் ஐ. ஜோசப் ஜான் கென்னடி , புதியம்புத்தூர் TNDTA தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தங்கத்துரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக முகாம் நாட்களில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முகாம் நாட்களில் பள்ளியின் தலைமை ஆசிரியை பி. ராஜவல்லி தலைமையில் மரம் நடுதல் முகாம் மற்றும் மழைநீர் சேகரிப்பு முகாமும், உதவித் தலைமை ஆசிரியர் ரா. சுந்தர்ராஜ் தலைமையில் மருத்துவ முகாம் மற்றும் சரிவிகித ஊட்டச்சத்துணவு விழிப்புணர்வு முகாமும், உதவித் தலைமையாசிரியை ச. ரமா தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரணியும் நடைபெற்றது. சிறப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி செல்வகுமார் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory