» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மரியன்னை கல்லூரி சார்பில் நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி

வியாழன் 3, அக்டோபர் 2019 10:44:59 AM (IST)தூத்துக்குடி மறவன் மடம் பகுதியில் தூத்துக்குடி மரியன்னை கல்லூரி சார்பில் நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய அரசாங்கத்தின் (UBA) "SWACHHATA Hi Sewa Campaign”  கீழ் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) இளங்கலை இரண்டாமாண்டு பொருளியல் துறை மற்றும் உளவியல் துறை சமூகம் மேம்பாட்டுத் திட்டம் பொறுப்பு ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் சேர்ந்து நெகிழிப்பை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை தூத்துக்குடி மறவன் மடத்தில் நடத்தியுள்ளார்கள்.  

கல்லுரியின் (தன்னாட்சி) தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை சோனல், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நெகிழியின் மாசு பற்றி சிறப்புரையாற்றினார். இக்கல்லூரி மாணவிகள் நெகிழியின் மாசு மற்றும் அதன் பாதிப்புகளை சிறு குழு நாடகம் மற்றும் நடனத்தின் மூலம் வெளிப்படுத்தினர். அதன்பின் மாணவிகள் வீடு வீடாகச் சென்று நெகிழிப்பைகளை பெற்றுக் கொண்டு துணிப்பைகளை வழங்கி நெகிழிப்பையின் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory