» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் துவக்கி வைத்தார்

புதன் 2, அக்டோபர் 2019 11:08:09 AM (IST)தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற மினி மாராத்தான் ஓட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை சேவையை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் போட்டியை காமராஜ் கல்லூரி முதல்வர்  நாகராஜன் தலைமையில்  மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி துவங்கி வைத்தார். மாணவர்களுக்கு 7 கிலோ மீட்டர் தூரம், மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. 

இதில் ஆண்களுக்கான போட்டியில்  வீரவநல்லூர் சென்ட் ஜான்ஸ் காலேஜ் மாணவர் பசுபதி முதல் பரிசு வென்றார்.  சிவகாசி  அன்ஜாக் கல்லூரி வேல்முருகன் இரண்டாம் பரிசும், ஸ்ரீவைகுண்டம்  கேஜிஏஸ் உயர்நிலைப்பள்ளி மாணவர் பொன்இசக்கி  மூன்றாம் பரிசும் வென்றனர். பெண்களுக்கான போட்டியில், திருநெல்வேலி நோவா ஸ்போர்ட்ஸ் அக்கடமி மாணவி பிரியங்கா  முதல் பரிசும், சுப்புலட்சுமி இரண்டாம் பரிசும், வீரவநல்லூர் சென்ட் ஜான்ஸ் காலேஜ் மாணவி முத்துசெல்வி மூன்றாம் பரிசும் வென்றனர்.  முதல் பரிசாக 2 கிராம் தங்க நாணம், இரண்டாம் பரிசாக ஒரு கிராம், மூன்றாம் பரிசாக அரை கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.  மேலும், கலந்து கொண்ட அணைத்து மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory