» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: அக்.11 வரை கால நீட்டிப்பு

செவ்வாய் 1, அக்டோபர் 2019 12:19:38 PM (IST)

தூத்துக்குடி கோரம்பள்ளம், அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர்கள் சேர்க்கை 8-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்.11 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், துணை இயக்குநர் / முதல்வர் எஸ்.பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் ஆகஸ்ட் 2019ம்; ஆண்டிற்கான நேரடி மாணவர்கள் சேர்க்கைக்கு 8-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது 11.10.2019 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நேரடி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு அசல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை மேற்காணும் அசல் சான்றுகளின் நகல் 5 எண்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 5 எண்கள் ஆகியவற்றை அரசு தொழிற் பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடிக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால், மாதந்தோறும் உதவித்தொகை ரூ.500/- (வருகை நாட்களுக்கு ஏற்ப), பேருந்து கட்டண சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா சீருடை - ஒரு செட், விலையில்லா காலணி - ஒரு செட், போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர்/முதல்வர் அவர்களை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory