» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. பள்ளியில் ஆசிரியர் தின விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2019 10:14:43 AM (IST)பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தின விழா  கொண்டாடப்பட்டது. 

தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் பெற்றோர்கள் மாணவர்கள் இணைந்து ஆசிரியர் தின விழாவைக் கொண்டாடினர்.  தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது. விழாவிற்கு தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் பொன்சிங் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் வரவேற்றார். அதன்பின் மாணவர்களின் பேச்சுப்போட்டி நடைபெற்றது. தலைவர் பொன்சிங் ஆசிரியர் தின விழா சிறப்புரையாற்றினார். 

தலைவர் பொன்சிங் தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்து, தலைமையாசிரியர் சிற்பியாக இருந்து தன்னை செதுக்கி வடிவமைத்ததாக கூறினார். மாணவர்களின் பெற்றோர் தனலெட்சுமி, ஜான்சி மேரி ஆகியோர் பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டி சிறப்புரையாற்றினர். பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, புதிர் ஆகியவற்றில் வெற்றி பெற்றேவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை பெல்சிபாய், தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். நாகலெட்சுமி நன்றி கூறினார். நாட்டுப்பண் பாட விழா இனிதே நிறைவு பெற்றது.


மக்கள் கருத்து

D. DharsonkumarSep 10, 2019 - 07:19:52 AM | Posted IP 162.1*****

Supper, sar

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory