» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூய மரியன்னை கல்லூரியில் தலைமைத்துவ நிகழ்ச்சி

செவ்வாய் 3, செப்டம்பர் 2019 11:26:26 AM (IST)தூத்துக்குடி தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரியில் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் தலைமைத்துவ நிகழ்ச்சி இரு தினங்கள் நடைப்பெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி லூசியாரோஸ், துணை முதல்வர் அருட்சகோதரி ஷிபானா, மாணவர் பேரவை தலைவர் அனிலா மயிலி ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இவ்விருநாள் நிகழ்விலும் சிறப்பு விருந்தினர்களாக உடன்குடி பங்குத்தந்தை புரொமில்டன் லோபோ மற்றும் எடிஃபை சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பயிற்சியாளர்களான தேன்மொழி மற்றும் ராஜகுமாரன் கலந்து கொண்டு தலைமைத்துவம் பற்றியும் சிறந்த தலைவனுக்குரிய பண்புகள் மற்றும் சிறப்புகள் பற்றியும் பல்வேறு கருத்துகளை மாணவியருடன் பகிர்ந்து கொண்டனர். 

அதன்பின், இந்நிகழ்ச்சி தொடர்பான பலவிதமான போட்டிகள் மாணவிகளுக்கு நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் கல்லூரி சுயநிதிப்பிரிவு இயக்குநர் அருட்சகோதரி மேரி ஜாய்ஸ் பேபி அவர்கள் நிறைவுரை வழங்கினார்கள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர்  பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். இறுதியில் கல்லூரிப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory