» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பிரகாசபுரம் செவன்த் டே பள்ளி நிர்வாக அலுவலகம் : அமெரிக்க தொழிலதிபர் திறந்து வைத்தார்

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 3:19:25 PM (IST)பிரகாசபுரம் செவன்த் டே ஜேம்ஸ் நினைவு மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி நிர்வாக அலுவலகக் கட்டிடத்தை அமெரிக்க தொழிலதிபர் மகாராஜன் பொன்ராஜ்-மெர்லின் பொன்ராஜ் தம்பதியினர் திறந்து வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்-பிரகாசபுரத்திலுள்ள செவன்த் டே ஜேம்ஸ் நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலகம் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செவன்த்டே நிர்வாக தலைவர் பாஸ்டர் டேனியல் தேவதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்டர் ஜீவா பொன்னப்பா, பொருளாளர் பொறியாளர் எஸ்.றி.மோகன், முன்னாள் செயலாளர் பாஸ்டர் கோர்டான் கிறிஸ்டோ, மண்டல செவன்த் டே பள்ளிகளின் இயக்குனர் பி.தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பள்ளி முதல்வர் பிராங்க்ளின் வாட்சன் வரவேற்று பேசினார். பள்ளி பொருளாளர் சுவிஷேச முத்து, பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஜேம்ஸ் நினைவு மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி நிர்வாக அலுவலகக் கட்டிடத்தை அமெரிக்க தொழிலதிபர் மகாராஜன் பொன்ராஜ், மெர்லின் பொன்ராஜ் தம்பதியினர் திறந்து வைத்தனர். தலைமையாசிரியர் அய்யாவு ஜோசப் நன்றி கூறினார். பின்னர் பொன்ராஜ், மெர்லின் பொன்ராஜ் தம்பதியினரின் 50- வது திருமண விழா அவரது இல்லத்தில் நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory