» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பகுதி பள்ளிகளில் சுதந்திர தின விழா கோலாகலம்

வெள்ளி 16, ஆகஸ்ட் 2019 11:04:13 AM (IST)தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியில் உள்ள பள்ளிகளில் நாட்டின் 73வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியற் கல்லூரி சுதந்திர தின விழா நடைபெற்றது.  முதல்வர் பேராசிரியர் எஸ். ஜெயக் குமார் வரவேற்புரையாற்றினார்.  விழாவில் கல்லூரி பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி தாளாளர் சசிகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து தலைமையுரையாற்றினார். சுதந்திர தின உறுதிமொழி நிகழ்ச்சியை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் செய்தார்.  மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பேராசிரியர் ஸ்டேன்லி ஜாண்சன் நன்றி கூறினார். கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.  விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் சிறப்பாக செய்திருந்தனர்.

நாசரேத் மர்காஷிஸ் பள்ளி:

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் 73-வது சுதந்திரதினவிழா மற்றும் மரம் நடுவிழா நடைபெற்றது. பேராலய உதவிகுரு  இஸ்ரவேல் ஞானராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார்.பள்ளி தலைமையாசிரியர் அல்பர்ட்  வரவேற்றார். பள்ளி தாளாளர்  சந்திரன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் புலமாடன் செட்டி யார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் தனபாலன் சத்தியசிகா மணி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

மாணவர்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்றனர். தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு நடைபெற்றது. தமிழ் ஆசிரியர்  எட்வின் சுதந்திர தினவிழாபற்றி உரையாற்றினார். மாநிலத்தின் பல்வேறுகலாச்சாரங்களை உணர்த்தும்  மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் என்னும் நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களின் நடனம் நடைபெற்றது.  உதவி தலைமையாசிரியை  சாரா ஞானபாய் நன்றி கூறினார்.

தொடர்ந்து தேசிய மாணவர்படையின் சார்பில் மரம் நடுவிழா நடைபெற்றது.  விருந்தினர்கள் மற்றும் என்.சி.சி மாணவர்கள் அனைவரும் சுதந்திர திருநாள் நினை வாக மரக்கன்றுகள்நட்டனர். இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங் கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் என்.சி.சி.அலுவலர் மேஜர் ஜெயசீலன் சேகர் மற்றும் என்.சி.சி மாணவர்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

அணைத்தலை தூ.நா.தி.அ.க.துவக்கப்பள்ளி:

நாசரேத் அருகிலுள்ள அணைத்தலை தூ.நா.தி.அ.க. துவக்கப் பள்ளியில் நடந்த 73-வது சுதந்திர தினவிழாவில் மரக்கன்றுகள் நடுவிழா நடைபெற்றது. தாளாளர் பொன்னு சாமி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரக்கன்றுகள் நடுவதை துவக்கி வைத்தார். தலை மையாசிரியை கோகிலாதங்கம் வரவேற்று பேசினார். ஜீவராஜ்,நளினி ஜீவராஜ் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகளை வழங்கினார். உதவி ஆசிரியை ஜெயக்குமாரி நன்றி கூறினார்.

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி:

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் தலைமையில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத் தலைவரும், நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைக் குருவானவருமான எட்வின் ஜெபராஜ் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory