» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பாலர் ஞாயிறு ஆராதனை!

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 10:34:48 AM (IST)நாசரேத் அருகே திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பாலர் ஞாயிறு ஆராதனை மற்றும் பவனி நடந்தது.

ஓய்வு பெற்ற குருவானவர் டாக்டர் சாமுவேல் பால்ராஜ் தலைமை வகித்தார்.சபை ஊழியர் ஸ்டான்லி ஜாண்சன் துரை முன்னிலை வகித்தார். மாணவிகள் ஏஞ்சல் பிளஸ்சி, ஜோவிட்டா பிளஸ்சி ஆகியோர் வேதபாடங்களை வாசித்தனர்.ஓய்வு நாள் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பு பாடல்களை பாடினர். ஆராதனையில் நாசரேத்தை சேர்ந்த ஜெபஸ் அகஸ்டின் சிறப்பு தேவ செய்தியை கொடுத்தார்.இதில் சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மாலையில் நடந்த பாலர் ஞாயிறு பவனியை சபை ஊழியர் ஸ்டான்லி ஜாண்சன் துரை தலைமை வகித்து ஜெபம் செய்து துவக்கி வைத்தார். பவனியானது ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஒய்.எம்.சி.ஏ.சதுக்கம், திருமறையூர், ஐ.எம்.எஸ். நகர் வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது. பவனியில் ஆசிரியைகள் ஜேஸ்மின் செல்வராணி, மெர்லின், பகிஷ்டாவிஜி, பிரின்சஸ் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேகர குருவானவர்கள் டாக்டர் எட்வின் ஜெபராஜ், இஸ்ரவேல் ஞானராஜ், ரெனால்டு, சபை ஊழியர் ஸ்டான்லி ஜாண்சன் துரை ஆகியோர் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory