» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சாரண, சாரணீய சிறப்பு இயக்க தேர்வு முகாம்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 8:11:27 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சாரண, சாரணீய இயக்க மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு தேர்வு முகாம் தூத்துக்குடி சக்தி வித்யாலயம் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. 

முகாமில், குருளையர் பிரிவில் 57 பேரும், நீலப் பறவையினர் பிரிவில் 45 பேரும் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு இறைவணக்கப் பாடல், விதிமுறைகள், உறுதிமொழி, உடற்பயிற்சி, விளையாட்டுகள், மெளக்லி கதை தொகுப்பு, தாரா கதை தொகுப்பு, முடிச்சுகள், கைவினைப் பொருள்கள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டன. மாநில பயிற்சியாளர்கள் கார்த்திகாயினி, சரஸ்வதி, உதவித் தேர்வாளர்கள் ஆனந்த், மணிமேகலை, சர்மிளா மற்றும் சக்தி வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் ஜெயா சண்முகம், சாரண, சாரணீய இயக்க மாவட்டச் செயலர் எட்வர்ட் ஜான்சன்பால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory