» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மர்காஷிஸ் பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் இலவச சீருடைகள் வழங்கும் விழா!

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 5:01:35 PM (IST)நாசரேத் மர்காஷிஸ் பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் இலவச சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் நாசரேத் தூய யோவான் மாதிரி தொடக்கப்பள்ளி 15 மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் டி. சார்லஸ் திரவியம் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். ஓவிய ஆசிரியர் அலேக்சன் வரவேற்றார். தூய யோவான் மாதிரிப் பள்ளி தலைமை ஆசிரியை பி. ஷிலா, உடற்கல்வி ஆசிரியர் சுஜித் என் செல்வசுந்தர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

உதவி தலைமை ஆசிரியர் டி. சார்லஸ் திரவியம் மாணவர்களுக்கு இலவச சீருடைகளையும் பள்ளி மாணவ மாணவியரகள் விளையாடு வதற்காக கால்பந்து, கைப்பந்து, எறிபந்து, செஸ் போர்டுகள், கேரம் போர்டு, டென்னிகாய்டு, ஸ்கிப்பிங் கயிறுகள் முதலிய விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார். விழாவில் தூய யோவான் மாதிரிப் பள்ளி ஆசிரியர்களும் மர்காஷிஸ் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்ற னர். இதற்கான ஏற்பாடுகளை மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளி தாளாளர் எ.டி. ஹெச்.சந்திரன், தலைமை ஆசிரியர் அல்பர்ட்  ஆகி யோர் முன்னிலையில் நாட்டு நலப் பணித் திட்ட அலவலர் ஜெய்சன் சாமுவேல் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory