» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூ.நா.தி.அ.க.பள்ளியில் நீர் பாதுகாப்பின் அவசியம் குறித்த பேரணி

வெள்ளி 9, ஆகஸ்ட் 2019 1:30:37 PM (IST)பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் நீர்பாதுகாப்பின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு கூட்டமும் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்க தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் தலைமைதாங்கினார். இதில் ஏராளமான பெற்றோர் வருகை தந்தனர். நீர் பாதுகாப்பு பற்றிய நீர்த்துளி உயிர்துளி எனும் குறும்படம் காண்பிக்கப்பட்டது. அதன்பின் நீர் பாதுகாப்பின் அவசியம் பற்றி தலைமையாசிரியர் உரையாற்றினார். வீடுகள் தோறும் மரம் வளர்பது பற்றியும், எதிர்வரும் மழை காலங்களில் மழைநீர் சேமிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மாணவர்களின் பேச்சுப்போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நீர் பாதுகாப்பு பதாகைகளை மாணவர்களும் பெற்றோர்களும் கையிலேந்தி ஊரின் முக்கிய வீதி வழியாக பேரணி நடைபெற்றது. ஆசிரியை பெல்சிபாய் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory