» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் சுற்றுச்சூழல் தினவிழா

வியாழன் 6, ஜூன் 2019 8:10:05 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையத்தில் இன்று உலகச் சுற்றுச்சூழல் தினமானது, நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறையினால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  

உலகச் சுற்றுச் சூழல் தினத்திற்கான 2019-ஆம் ஆண்டின் நோக்கமான காற்றுமாசுபடுதல் என்ற தலைப்பை மையமாகக் கொண்டு இவ்விழாவில் காற்றுமாசுபடுவதை தவிர்ப்போம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் மற்றும் எல்லோரும் ஒருங்கிணைந்து காற்று மாசுபடுவதை தவிர்க்கும் முறைகள் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது.மீன்வளக் கல்லூரியின் முதல்வர்(பொ) வேலாயுதம் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தலைமையுரைஆற்றினார்.  மீன்பிடி தொழில்நுட்ப மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் தலைவர் நீதிச்செல்வன் காற்று மாசுபாடு மற்றும் இன்றைய சூழலில் நீர்சேமிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.  

நீர்வளச் சூழலியல் மேலாண்மைத்துறை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் பத்மாவதி உலகச் சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவத்தையும், காற்று மாசுபடுவதைத் தவிர்க்கும் முறைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். ஓவியப் போட்டியில் செல்வராணி, இரண்டாமாண்டு மாணவி மற்றும் பேச்சுப் போட்டியில் ,முதலாமாண்டு மாணவி ஆகியோர் முதல் பரிசுகளை வென்றனர். இவ்விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.  இறுதியில் நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறையின் உதவிப்பேராசிரியர் மணிமேகலை நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory