» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புனிதவளன் மேல்நிலைப்பள்ளியில் பொதுஅறிவு வினாடி-வினா போட்டி

செவ்வாய் 2, ஏப்ரல் 2019 11:51:43 AM (IST)ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பொதுஅறிவு சம்பந்தமான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் புனிதவளன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி போட்டித்தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்தும் நோக்கத்துடன் பொது அறிவு சம்பந்தமான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு சுற்றுகளாக பள்ளி அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் புனிதவளன் அணியினர் முதல் இடமும், புனித பெமில்டஸ் அணி மற்றும் புனித சாலமோன் அணியினர் முறையே இரண்டாம் மற்றும் முன்றாம் இடமும் பிடித்தனர். 

மேலும் இதில் பங்கேற்ற மாணவிகள் விஜயலெட்சுமி, சிவரஞ்சினி, ஸ்ரீமதி மற்றும் லட்சுமி ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியர் விக்டர் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். போட்டியை கல்விக் குழு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

சரவண முத்து - முன்னாள் பள்ளி மாணவன்Aug 1, 2019 - 01:13:59 PM | Posted IP 162.1*****

மாணவர்களின் திறனை ஊக்குவிப்பதாக இப்போட்டி அமைந்துள்ளது . மேலும் இது போன்று கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளிலும் எம்பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்... தலைமை ஆசிரியர் , ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு எனது பாராட்டுக்கள் ....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory