» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பண்டாரம்பட்டி தூநாதிஅக. தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா

ஞாயிறு 31, மார்ச் 2019 12:57:04 PM (IST)தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி, தூநாதிஅக. தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. 

விழாவிற்கு டூவிபுரம் சேகர குருவானவர் பள்ளித் தாளாளர் லூர்துராஜ் ஜெயசிங் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி ஊரகம் வட்டார கல்வி அலுவலர் பாஸ்கரன், தூத்துக்குடி நகர்புறம் வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன் துரைராஜ் தேவாசீர், திருவைகுண்டம்;வட்டார கல்வி அலுவலர் ஜெசுராஜன் செல்வக்குமார், மானூர் வட்டார கல்வி அலுவலர் கீதா, அனைவருக்கும் கல்வி இயக்கம் மேற்பார்வையாளர் பவுண்ராஜ், ஆசிரியர் பயிற்றுநர் கிருஷ்ணவேணி கல்வி சார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் வரவேற்புரையாற்றி அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார். ஆசிரியர் பெல்சிபாய் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். 

சிறப்பு விருந்தினர்களாக லயன் சிவக்குமார், திருமண்டல செயற்குழு உறுப்பினர் இம்மானுவேல், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் தனசேகரன், ராஜேஷ்குமார், சேகர செயலர் ஸ்டீபன் ஜெபராஜ், பொருளாளர் பாபு பிரபாகர், முன்னாள் பெருமன்ற உறுப்பினர் தினகரன், சேகர மன்ற உறுப்பினர்கள் பொன்ராஜ், கனிஷ்டன், ராஜ்குமார், பண்டாரம்பட்டி ஊர் பிரமுகர் காளீஸ்வரன், வன்னியராஜ், ரமேஷ் பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் திரவியராஜ், 1வது வார்டு முன்னாள் கவுன்சிலர் பெருமாள்தாய் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory