» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மண்வள தினம்

வியாழன் 6, டிசம்பர் 2018 7:21:41 PM (IST)




தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச மண் வள தினம் கொண்டாடப்பட்டது

சர்வதேச மண் வள தினமானது, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரையின்படி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்  கொண்டாடப்பட்டது. இந்த வருடத்திற்கான மண்வள தினத்தின் நோக்கமான மண் மாசுபாடுவதை தவிர்த்தல் பற்றிய கருத்தரங்கமானது இக்கல்லூரியின் நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறையினரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. 

இயற்கை வளங்களில் மண் வளம் பெரிதும் இன்றியமையாதது மட்டுமல்லாமல் மனிதர்களுக்குத் தேவையான உணவு உற்பத்தி, நீர் ஆதாரம் மற்றும் அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருப்பதால் உலகம் முழுவதும் டிசம்பர் 5-ம் நாள் மண் வள தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் துவக்க விழாவில்,  நீர்வளச் சூழலியல் மேலாண்மைத்துறை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், பத்மாவதி வரவேற்புரை நிகழ்த்தினார். 

இக்கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) சுஜாத்குமார் தனது தலைமை உரையில் மண் வளதினத்தின் முக்கியத்துவம் மற்றும் மீன்வளர்ப்பில் மண் வளத்தின் பங்கு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் மீன்வளர்ப்புத் துறையின் தலைவர் ஆதித்தன்,  தனது கருத்துரையில் மண் வளத்தையும் அதை சார்ந்த தொழில் நுட்பங்களையும் அதன் செயல்முறை விளக்கங்களையும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியைச் சார்ந்த 20 மீன் பண்ணையாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.  நீர்வளச் சூழலியல் மேலாண்மைத்துறையின் உதவிப்பேராசிரியர் ராணி நன்றியுரை வழங்கினார்.  , உதவிப்பேராசிரியர் மணிமேகலை  இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory