» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கொங்கராயகுறிச்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

செவ்வாய் 30, அக்டோபர் 2018 7:40:34 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயகுறிச்சி கேம்பிரிட்ஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 

கண்காட்சியை பள்ளியின் மூத்த ஆசிரியை பொன்விக்டோரியா தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் சுமதி முன்னிலை வகித்தார். அறிவியல் கண்காட்சியானது 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மற்றும் 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில், மாணவ, மாணவியர்கள் தங்களது சிந்தனையில் உதயமான புதிய வடிவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளையும், கீரைகள், பழங்களினால் ஏற்படும் பயன்கள் தொடர்பான விளக்கத்தினையும் பார்வைக்காக வைத்து அசத்தினர்.

கண்காட்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களில் அதிகளவிலானவர்கள் நவீனமுறையில் மழைநீரை சேகரித்தல், குடிநீர் தொட்டிகளில் இருந்து தண்ணீர் வீணாகாமல் சேமித்தல், இயற்கையை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு இல்லாத ஏர்கூலர், மின்சார சிக்கனத்திற்கான புதிய கருவிகள் போன்ற தற்போதைய தேவைக்கு ஏற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வைக்காக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மாணவ, மாணவியர்களின் புதுப்புது அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்ட பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வியந்து பாராட்டினர். பள்ளி ஆசிரியர்கள் மணிகண்டன், காசிராணி, நாகமணி, பிச்சம்மாள், ரத்தினசாமி, சண்முகவேல், எஸ்தர் தலைமையிலான நடுவர் குழுவினர் சிறந்த மாணவ, மாணவியர்களை தேர்வு செய்தனர். ஏ பிரிவில் வெற்றி பெற்ற அப்சரா, ஜாஸ்மின் கம்ஷா, சுவேதா, பி பிரிவில் வெற்றி பெற்ற சுபலெட்சுமி, அனீஷ்பாத்திமா, உம்முல்நஜிதா, சி பிரிவில் வெற்றி பெற்ற முஹம்மது ஹமீது, முஹம்மது முஜின், பவானி ஆகியோருக்கு பள்ளி தாளாளர் பால்ராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்.இதில், ஆசிரியை-ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory