» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் கணித வினாடிவினா போட்டி

திங்கள் 29, அக்டோபர் 2018 12:16:56 PM (IST)
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையேயான கணித வினாடிவினா போட்டி நடைபெற்றது. 

அன்னம்மாள் கல்லுாரியில் கல்லுாரி கணிதமன்றம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான கணித வினாடிவினா போட்டி நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரை வழங்கினார். வினாடிவினா நிகழ்ச்சியை வ.உ.சிதம்பரனார் கல்லூரியின் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநரும் கணிதப் பேராசிரியருமான நெல்லை முருகன் நடத்தினார். 16 பள்ளிகளைச் சேர்ந்த ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தகுதிச்சுற்றில் பங்கேற்றனர். 

6 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். ஆறு குழுக்களுக்கும் ஆர்யபட்டா, பிதாகரஸ், யூக்ளிட், பாஸ்கராச்சாரியா, ரெனே டெஸ்கார்டிஸ் எனப் பெயரிடப்பட்டு ஆறு சுற்றுகளாக வினாடிவினா நடத்தப்பட்டது. இப்போட்டியில் தூத்துக்குடி அழகர் பள்ளி முதல் இடத்தையும் விகாசா பள்ளி இரண்டாம் இடத்தையும் ஹோலிகிராஸ் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றது. 

கல்லூரியின் கணிதமன்றத்தலைவியும் இளங்கலை கல்வியியல் முதலாமாண்டு பயிலும் மாணவி அபர்ணா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி செயலர் முரளிதரன், கல்லூரி முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களும், கணிதத்துறை உதவிப்பேராசிரியைகளுமான சண்முக செல்வ சிவசங்கரி மற்றும் .எமிமா ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory