» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சுற்றுவட்டார பள்ளிகளில் 72-வது சுதந்திர தினவிழா

வியாழன் 16, ஆகஸ்ட் 2018 1:46:43 PM (IST)நாசரேத் சுற்று வட்டாரங்களிலுள்ள பள்ளிகளில் 72-வது சுதந்திர தினவிழா கோலாகாலமாக கொண்டாடப்பட்டது.

துாத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் 72-வது சுதந்திர தினவிழா கோலாகாலமாக கொண்டாடப்பட்டது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெ.தாமஸ் கலந்துகொண்டு தேசியகொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பள்ளி பழைய மாணவர் டாக்டர் இம்மானுவேல் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பள்ளித்தாளாளர் செல்வின் தலைமை வகித்தார்.பள்ளித் தலைமையாசிரியர் ஜாண் செல்வராஜ் வரவேற்று பேசினார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதுகலை தமிழ் ஆசிரியை ஜெபமரிய ஸ்டெல்லா நன்றி கூறினார். பட்டதாரி தமிழாசிரியை செல்வம் ஜோசப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி னார். 

நாசரேத் அருகிலுள்ள நாலுமாவடி ஸ்ரீ ஞானானந்த சன்மார்க்க சைவப்பிரகாச வித்யாசாலை துவக்கப்பள்ளியில் 72-வது சுதந்திர தின விழா பள்ளிச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. தலைமை யாசிரியை ஒளவை வரவேற்று பேசினார். ஊர் தலைவர் அழகேசன் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முடிவில் மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 72-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தேசியக்கொடி ஏற்றினார். பள்ளித்தலைவர் சத்தியவதிமனோகரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அனி ஜெரால்டு சுதந்திர தினவிழா செய்தியை வழங்கினார்.பள்ளிநிர்வாகி பியூலாசாலமோன் முன்னவர்கள் சுதந்திரத்திற்காக செய்த தியாகத்தையும், அதை நாம் எப்படி பேணிகாக்க வேண்டும் என மாண வர்களுக்கு எடுத்துரைத்தார். 

பள்ளி மாணவர்கள் மாறுவேட போட்டியிட்டு வந்தனர். பள்ளி குழந்தைகளுக்கு பேச்சு போட்டிகள் மற்றும் நாடகம் நடைபெற்றன. இறுதியில் பள்ளி துணைமுதல்வர் மகிலா சரவணன் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை ஆசிரியர்கள் செய்து இருந்தனர். முடிவில் பள்ளி மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், தோழப்பன்பண்ணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 72-வது சுதந்திரதினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். தலைமையாசிரியை செல்வமணி வர வேற்று பேசினார்.பள்ளியின் அறிவியல்ஆசிரியர் ஜோசப்வெனிஸ்க்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இராமர், ஊர்ப்பொது மக்கள் குயின் ருஜிதா,மாரி, விக்டோரியா, ஆறுமுக ரஞ்சிதம், அகஸ்டா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ஜோசப் வெனிஸ் நன்றி கூறினார்.

நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் முதல்வர் ஆக்னஸ் மேபல் தலைமையில் தாளாளர் அரிமா புஷ்பராஜ் கொடியேற்றினார். நாசரேத் புனிதலூக்கா செவிலியர்கல்லூரியில் நாசரேத் தூயயோவான் பேராலய தலைமைப் பாதிரியார் எட்வின்ஜெபராஜ் கொடியேற்றினார். உதவிப்பாதிரியார் இஸ்ரவேல் ஞானராஜ், முதல்வர் டாக்டர் ஜெயராணி பிரேம்குமார் உள்பட அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நாசரேத் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரங்கசாமி கொடியேற்றினார்.சுகாதார ஆய்வாளர் பால் ஆபிரகாம் உள்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நாசரேத் அருகிலுள்ள அனைத்தலை தூ.நா.தி.அ.க. துவக்கப்பள்ளி யில் 72-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ரொக்ஸி ஜெபவீரன் ஜெபித்து விழாவினை துவக்கி வைத்தார். அபிஷேகம் தலைமை வகித்து கொடியேற்றினார். ஜீவராஜ், நளினி ஜீவராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் கெத்சியாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை கோகிலா தங்கம் சமாதானம் வரவேற்று பேசினார். உதவி ஆசிரியை ஜெயக்குமாரி நன்றி கூறினார். முடிவில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நாசரேத்-திருமறைர்செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் 72-வது சுதந்திர தினவிழா நடைபெற்றது.விழாவிற்கு தாளாளர் அருமைநாயகம் சாம்ஹீபர் தலைமை வகித்தார். தலைமையாசிரியை ஜெசி வரவேற்று பேசினார். புரவலர்கள் பொன் ரத்தினம், தினகரன் மனுவேல், சுகந்தி பொன்ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சென்னை தொழிலதிபர் சுரேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து செவித்திறன் அற்ற மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். செவித்திறன் அற்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தாளாளர் தலைமையில் தலைமையா சிரியை, மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory